இனி 7 நாட்களுக்குள்… நகை கடன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 24, 2025

Spread the love

வங்கிகளில் நகை கடன் வாங்குவதில் உள்ள விதிமுறைகளில் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறையாகும். அதற்கு முன்பு உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும்.

ஏலத்தின் இருப்பு விலை நகையின் மதிப்பில் 90 சதவீதம் இருக்க வேண்டும். இரண்டு ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85 சதவீதமாக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாட்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.