தீபாவளி போனஸாக சோன் பப்டி வழங்கிய நிறுவனம்… கையில் வாங்கியதும் ஊழியர்கள் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 23, 2025

Spread the love

ஹரியானாவில் உள்ள கன்னார் நகரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போன சரவிக்கப்பட்டது. அதனை ஆவலாக வாங்குவதற்கு தொழிலாளிகள் அனைவரும் காத்திருந்த நிலையில் போன சாக அவர்களுக்கு சோன் பப்டி அடங்கிய ஒரு சிறிய பெட்டி வழங்கப்பட்டது. முதலில் அதில் என்ன உள்ளது என்று அவர்களுக்கு தெரியவில்லை. பிறகு அது சிறுவர் சிறுமிகள் விரும்பி சாப்பிடக்கூடிய சோன் பப்டி என்று தெரிய வந்ததால் அவர்கள் கொந்தளித்தனர். பொதுவாகவே அனைத்து நிறுவனங்களிலும் தீபாவளி போனஸ் ஆக பணம்தான் வழங்கப்படும்.

ஆனால் இந்த நிறுவனம் இனிப்பு வழங்கிய தொழிலாளிகளுக்கு அதிருப்தி கொடுத்தது. ஏற்கனவே கால தாமத ஊதியம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக தொழிலாளர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் நிறுவனம் இந்த இனிப்பு பெட்டிகளை வழங்கியது தங்களை அவமதிப்பது போல உள்ளது என தொழிலாளிகள் உணர்ந்தனர். இதனால் தொழிலாளர்கள் அந்த இனிப்பு பெட்டிகளை நிறுவனத்தின் வாசலின் முன்பு தூக்கி வீசி செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வீடியோ தொழிலாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.