போடு ரகிட ரகிட…. பெண்களுக்கு மாதம் ரூ.30,000… அடுத்த அதிரடி அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 23, 2025

Spread the love

பீகார் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வாக்காளர்களை ஈர்க்க திட்டங்களையும் வாக்குறுதிகளையும் கட்சிகள் அள்ளி வீசுகின்றன. அண்மையில் ஆளும் JUD – BJP அரசு சுய வேலைவாய்ப்புக்காக பெண்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கியது. இந்நிலையில் பெண்கள் சுய உதவி குழுவினருக்கு மாதம் 30,000 சம்பளத்தில் நிரந்தர அரசு வேலை வழங்கப்படும் என்று RJD கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த அரசின் கீழ் ஜீவிகா தீதி பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அனைத்து ஜீவிகா சி.எம். தீதி பெண் ஊழியர்களையும் நாங்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றுவோம். அவர்களுக்கு அரசு ஊழியர்கள் என்ற அந்தஸ்து வழங்கப்படும். அவர்களின் சம்பளமும் மாதம் ரூ.30,000 ஆக உயர்த்தப்படும். இது ஒரு சாதாரண அறிவிப்பு அல்ல. ஜீவிகா தீதி பெண்களின் நீண்டகால கோரிக்கையை நாங்கள் நிறைவேற்ற இருக்கிறோம். பெண் ஊழியர்களுக்கு மாதம் ரூ.2,000 கூடுதல் அலவன்ஸும், ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார் .