தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. காலை முதலே கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்வதற்கு நவ.15 (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வரும் பிற மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
