என் பொண்டாட்டிக்கு என் அப்பா தான் புருஷன்… “என்னை பைத்தியம் என்று சொல்லி” மரணத்திற்கு முன்பு மகன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!!

By Soundarya on ஐப்பசி 22, 2025

Spread the love

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அகில் அக்தர். 33 வயதான இவர் தன்னுடைய மரணத்திற்கு முன்பாக பதிவு செய்த வீடியோவில் தனது தந்தைக்கும், மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும் தன்னுடைய தாய் மற்றும் சகோதரி தன்னை கொலை செய்ய அல்லது பொய் வழக்கில் சிக்க வைப்பதற்கு சதி செய்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். அந்த வீடியோவில், “அவர்கள் என்னை பைத்தியம் என்று கூறி தங்களுடைய நற்பெயரை காப்பாற்ற பார்க்கிறார்கள். நான் என்னுடைய மனைவியை திருமணம் செய்யவில்லை. என் மனைவியை என் தந்தை தான் திருமணம் செய்து இருக்கிறார் என்று பேசியுள்ளார்.

இதனை அடுத்து குடும்ப நண்பர்களுக்கு அவர் அனுப்பிய இந்த வீடியோ அடிப்படையில் அவருடைய தந்தை மற்றும் தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மற்றொரு வீடியோவில் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தன்னுடைய மனநிலை கோளாறால் கூறப்பட்டவை என்றும் அவர் தெரிவித்திருப்பது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போதை பொருள் அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாகவும் குடும்பத்தினர் கூறியது குறிப்பிடத்தக்கது.