15 வயாகரா மாத்திரைகள்… தாம்பத்ய உறவின்போது மயக்கமடைந்த கணவன்… அடுத்து நடந்த பயங்கரம்… சினிமாவையே மிஞ்சும் திரில்லிங் சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகர் பகுதியில் வசித்து வரும் காத்தி மோனிகா (29) காத்தி சுரேஷ் (36) என்ற டிரைவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் திடீரென உயிரிழந்தார். அப்போது அவருடைய உறவினர்களிடம் பாலியல் உறவின்போது அவர் உயிரிழந்து விட்டார் என்று மனைவி மோனிகா கூறியுள்ளார். இருந்தாலும் போலீசாரின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அதாவது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பண தேவைக்காகவும், பிற விஷயங்களுக்காகவும் மோனிகா பாலியல் தொழிலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

பணம் வர வர மேலும் அவருடைய ஆசையை தூண்டியுள்ளது. இதனிடையே அஜய் என்பவர் உடன் ஏற்பட்ட தகாத உறவு கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஆனால் அந்தக் கள்ளக்காதலுக்கு கணவர் சுரேஷ் இடையூறாக இருந்ததால் இது குறித்து தனது கள்ளக்காதலனிடம் மோனிகா கூறியுள்ளார். உடனே சுரேஷ் அதை தீர்த்து கட்டி விடலாம் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் யோசனை சொன்னதால் இருவரும் சேர்ந்து பலமுறை சதித்திட்டம் தீட்டி தோல்வியில் முடிந்துள்ளது. முதல் முயற்சியில் கணவருக்கு 15 வயாகரா மாத்திரைகளை அசைவ உணவில் கலந்து கொடுத்துள்ளனர். ஆனால் அதிலிருந்து ஏதோ வாடை வருகிறது என்று கூறி சாப்பிட மறுத்துவிட்டார்.

   

அடுத்ததாக மற்றொரு யோசனையில் சுரேஷின் மதுபானத்தில் தூக்க மாத்திரைகளையும் ரத்த கொதிப்பு மாத்திரைகளையும் மௌனிகா பொடி செய்து கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த சுரேஷ் சுயநினைவு இல்லாமல் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் சேலையை எடுத்து கணவரின் கழுத்தில் சுற்றி மூச்சுத் திணற வைத்து அவரை மோனிகா கொலை செய்துள்ளார். பிறகு உயிரிழந்து விட்டார் என்ற உறுதி செய்ததும் சுரேஷின் உறவினர்களை அழைத்துள்ளார். தாம்பத்ய உறவின்போது அவர் மயக்கமடைந்து விட்டார் என்று பொய்யான தகவல்களை கூறிய நிலையில் உடனே உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

   

உடனே உறவினர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இது பெரிய சதித்திட்டம் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மௌனிகாவுக்கு உதவியாக இருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுரேஷ் கொலையில் உறுதுணையாக இருந்த ஸ்ரீஜா மற்றும் ராதா இருவருமே பாலியல் தொழில் செய்து வருபவர்கள். அனைவரும் சேர்ந்து சுரேஷை கொலை செய்ய திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அனைவரையும் போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.