“எப்ப வேணாலும் எமன் வருவான் போல”… நூலிழையில் உயிர் பிழைத்த நபர்… இப்படி ஒரு அதிசயமா…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் கடையின் முன்பாக நபர் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். அதில் நடந்தது நிமிடங்களில் உயிரை காப்பாற்றும் அதிசயம் தான். அந்த வீடியோவில் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தால் லாரியின் டயர் வெடித்து சிதறியது.

அதிலிருந்து விரைந்து பறந்த இரும்பு பாகம் நேரடியாக அந்த நபரின் பக்கத்தை நோக்கி வந்தது. ஆனால் கடைசி நொடியில் அந்த இரும்பு பாகம் அவரை தாக்காமல் நின்றது. இதனால் அவர் எந்த ஒரு அபாயத்தையும் சந்திக்காமல் உயிர்பிழைத்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நிமிடத்தில் மனிதனின் உயிர் போவதும் ஒரு நிமிடத்தில் உயிர் பிழைப்பதும் அதிசயம் தான்.