நடிகர் துருவ் விக்ரம் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 18 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் வணிக ரீதியாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் படத்தின் ப்ரோமோஷன் காக பட குழுவினருடன் திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்குக்கு மாரி செல்வராஜ் சென்றிருந்தார். அப்போது படம் பார்த்த ரசிகர்களை சந்திக்கும் போது சில இளைஞர்கள் கூச்சல் போட்டபடி இருந்தனர்.
இதனைக் கண்டு கோபமடைந்த மாரி செல்வராஜ், சாராயம் குடித்தது மாதிரி ஆடாதீங்க, நான் உங்களுக்கு சாராயத்தை கொடுக்கவில்லை. புத்தகத்தை தான் கொடுத்தேன். என்னுடைய படத்தை நீங்கள் புத்தகமாக பாருங்கள். என்னை அண்ணன் என அழைப்பவர்கள் எல்லோரும் எனக்கு தம்பிகள் தான். உங்கள் மீது எனக்கு பெரிய அக்கறை இருக்கிறது. அதேபோல நீங்களும் பிறரை நேசிக்கவும் அடுத்தவரை துன்புறுத்தாமல் வாழ வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உனக்கு நான் சாராயம் கொடுக்கல கையில புத்தகம் தான் கொடுக்கிறேன் என்னோட படத்தை புத்தகமா பாரு – @mari_selvaraj Speech 📕 📝
Great sir🤩
— saba🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Dmk_saba_) October 20, 2025
