BREAKING: ஒரே நாளில் ரூ.3680 குறைந்த தங்கம் விலை… நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று தங்கத்தின் விலை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 3680 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் காலையில் 2400 குறைந்த நிலையில் மாலையில் மேலும் 1280 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் 11,540 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.