உத்திரபிரதேச மாநிலம் மல்கான்பூர் கிராமத்தைச் சேர்ந்த உமேஷ் என்பவர் கடந்த 16ஆம் தேதி அவரது அறையில் கொடூரமாக தாக்கப்பட்டு அலறி துடித்தார். அந்த சத்தம் கேட்டு குடும்பத்தினர் விரைந்து சென்று பார்த்த போது கத்தி குத்து காயங்களுடன் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உமேஷ் வலியில் துடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதாவது உமேஷ் அண்ணன் உதயின் மனைவி மஞ்சு. மஞ்சுவின் தங்கையை உமேஷ் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு உமேஷின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தார். இதனை அறிந்து மஞ்சுவின் தங்கை மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். தனது தங்கை சோகமாக இருப்பதை பார்த்த மஞ்சு சம்பவம் நடந்த அன்று உமேஷின் அறைக்குள் சென்று அவரை கத்தியால் சரமாரியாக குத்தி அந்தரங்க உறுப்பை துண்டித்தது தெரியவந்தது. தலைமறைவாக இருக்கும் மஞ்சுவை போலீசார் தேடி வருகின்றனர்.
