மருமகனுடன் அடிக்கடி உல்லாசம்…!! பிளேடால் கையை அறுத்த 2 பிள்ளைகளின் தாய்…. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 21, 2025

Spread the love

டெல்லியை சேர்ந்த திருமணமான பெண் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். அப்போது தனது மருமகன் உறவு முறை கொண்ட அலோக் என்ற வாலிபருடன் பூஜா நெருக்கமாக பழகி அடிக்கடி உலாசமாக இருந்துள்ளார். அலோக் பூஜாவை விட 15 வயது சிறியவர். இது குறித்து அறிந்த பூஜாவின் கணவர் அலோக்கை கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த பூஜா தனது கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டு பரேலி பகுதியில் 7 மாதங்கள் அலோக்குடன் ஒன்றாக தங்கி இருந்தார்.

பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் அலோக் தனது சொந்த ஊருக்கு சென்றார். சம்பவம் நடைபெற்ற அன்று பூஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அலோக்கை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அவர் பூஜாவுடன் தனது உறவை தொடர முடியாது என கூறியதால் பூஜா பிளேடால் மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.