ஸ்டாலினுக்கு செம ஷாக்… கூட்டணி நிலைப்பாட்டை திடீரென மாற்றிய விஜய்… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மறுபக்கம் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுகவுக்கு போட்டியாக விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்திய கரூர் விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜயை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் இதுவரை தன் கூட்டணி குறித்து அறிவிப்பை விஜய் அறிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றார். இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் தன்னுடைய கூட்டணி நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை குறிக்கோளை முன்னிறுத்தி, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இருக்க தமிழக வெற்றிக்கலகம் நிர்வாகிகளுக்கு விஜய் புதிய அசைன்மென்ட் கொடுத்துள்ளாராம். இதன் முதல் படியாக கரூருக்கு வருகை தர உள்ளதாக கூறப்படும் ராகுல் காந்தியை விஜய் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இழுப்பதில்தான் சிக்கல் என்றும் கூறப்படுகிறது.