அன்பையும் பாசத்தையும் ஊட்டி தோளில் தூக்கி வளர்த்த பெற்றோர்களை கடைசி காலத்தில் கைவிட்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முடிவு கட்ட தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. வயதான பெற்றோர்களை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பத்து முதல் 15 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பெற்றோருக்கு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து திருமணத்திற்கு பிறகு பெற்றோர்களை அனாதையாக அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் நாட்டில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு சிலர் சாலைகளில் பெற்றோர்களை விட்டு செல்லும் சம்பவங்கள் கூட நிகழ்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தெலுங்கானா அரசு தற்போது புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
