மாணவர்கள் இனி கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் மாற்றம் செய்யக்கூடிய நேரத்தில் மைக்ரேஷன் சர்டிபிகேட் பெறுவதற்கு அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக கல்வி அமைச்சர் தான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மைக்ரேஷன் சர்டிபிகேட் இனி டிஜி லாக்கர் வழியாக ஆன்லைனில் வழங்கப்படும். இதனால் மாணவர்கள் தங்களுடைய பதிவு சான்றிதழ்களை எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து பிற கல்வி நிறுவனங்களுக்கு உடனே சமர்ப்பிக்கலாம்.
இந்த புதிய நடைமுறை ஆவண இழப்பு மற்றும் போலிச் சான்றிதழ் பிரச்சனைகளை தடுப்பதற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜி லாக்கர் மூலமாக சான்றிதழ்களை வழங்கக்கூடிய புதிய நடைமுறை தற்போது தேசிய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட செயல்படுத்தப்படுகின்றது. மாணவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி டிஜி லாக்கர் கணக்கில் உள் நுழைந்து மைக்ரேஷன் சர்டிபிகேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் டிஜிட்டல் கல்வி சேவைகளை ஊக்குவிக்கும் விதமாக இது மாணவர்களுக்கு நேரம் மற்றும் பணத்தை மிச்சம் படுத்தும் முக்கியமா மாற்றமாக பார்க்கப்படுகிறது.
