யாரை ஏமாற்றுகிறார் CM..? மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்… அண்ணாமலை காட்டம்..!

By Soundarya on ஐப்பசி 18, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு விட்டன. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயின் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆணவப்படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில்  ஆணவப்படுகொலையை தடுக்க ஆணையம் அமைத்து யாரை ஏமாற்றுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினர் மீதான வன்முறை 68% அதிகரித்துள்ளதாக  கூறியுள்ள அவர், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாக தெரியவில்லை. ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை முதலமைச்சர் வீணடிக்கிறார் எனவும் சாடியுள்ளார்.