“அந்த அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே”… தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களில், கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்தகைய போக்சோ வழக்குகளில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் போக்சோ சட்ட பிரிவின்கீழ் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய தேவையில்லை என்று தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பரிசோதனையின் தன்மை மற்றும் அளவை தீர்மானிக்கும் அதிகாரம் பரிசோதனை செய்யும் மருத்துவருக்கு மட்டுமே உள்ளதாக நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளுக்கு எதிரான சாதாரண பாலியல் குற்றங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதன் மூலம் அந்த குழந்தை மன உளைச்சலுக்கு ஆளாவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.