தீபாவளி விடுமுறை… மக்களுக்கு மேலும் ஒரு ஹேப்பி நியூஸ்… அரசு அசத்தல் அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தற்போதைய தங்கள் சொந்த ஊருக்கு படை எடுக்க தொடங்கிவிட்டனர். நேற்று முதலே பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதேசமயம் தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 21ஆம் தேதி மக்களின் வசதிக்காக அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுவதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பலர் பேருந்து கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பொது மக்களின் வசதிக்காகவும் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.