தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கமும் மற்றொரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள். மறுபக்கம் மாற்று கட்சியினரை தொடர்ந்து விமர்சிக்கும் வேளையும் நடந்து கொண்டிருக்கிறது. திமுகவை வீழ்த்தும் நோக்கில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லையில் அண்ணாமலைக்கு மன்றம் தொடங்கியதோடு, புதிதாக கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, என் மீது வைத்திருக்கும் அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. அனைவரும் முதலில் தங்களது குடும்பத்தினரின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
