ஈவு இரக்கமே இல்லையா?… ரத்த வெள்ளத்தில் மிதந்த சைக்கிள்.. 13 வயது சிறுவன் மீது 2 முறை காரை ஏற்றி… நொடி பொழுதில் நடந்த கொடூர சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

டெல்லியில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஜோஹனா என்பவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். இவருடைய இளைய மகன் முர்ஷித். எட்டாம் வகுப்பு படித்து வரும் இவரை பெட்ரோல் பம்ப் அருகே வாகனம் பின்னாலிருந்து மோதியுள்ளது. ஓட்டுநர் முதலில் குழந்தையை மோதி நசுக்கி அதன் பிறகு மீண்டும் வண்டியை ஏற்றுக்கொண்டு விட்டு தப்பி ஓடி விட்டார் என நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்து விட்டதாக உடன் சென்றவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திய போது சிறுவன் வீட்டில் இருந்து சில படிகள் தொலைவில் நடந்த போது மாலை 4.30 மணி அளவில் சிற்றுண்டி வாங்க வெளியே சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அந்த இடத்திற்கு எதிரே உள்ள பெட்ரோல் பம்ப் மற்றும் பல குடிசைகளால் நெரிசலான பல சந்துகள் இருந்துள்ளது. அப்போது வந்த கார் சிறுவர் மீது மோதி இறங்கியதில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.