இந்தியாவில் சர்க்கரையை ORS என விற்பனை செய்த நிறுவனங்கள்… 8 வருடமாக போராடி வென்ற பெண் மருத்துவர்… நெகிழ்ச்சி வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

இந்தியாவில் சர்க்கரை பானங்களை ORS என்று ஸ்டிக்கர் ஒட்டி பல நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தன. இந்தப் பிரச்சனை தொடர்பாக ஹைதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த எட்டு வருடங்களாக குரல் கொடுத்து வந்தார். இவருடைய தொடர் முயற்சியின் விளைவாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ORS உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அப்படி அதை பூர்த்தி செய்யாததை ORS என்று விளம்பரப்படுத்தி விற்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதனை வரவேற்று நாம் ஜெயித்து விட்டோம் என்று சிவரஞ்சனி நிகழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ORS என்று சந்தைப்படுத்தப்பட்ட பல பானங்களில் WHO பரிந்துரைத்த அளவைவிட பத்து மடங்கு அதிக சர்க்கரை இருந்தது. இந்த அதிகப்படியான சர்க்கரை குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வயிற்றுப்போக்கு மற்றும் அதன் சிக்கல்களை மோசமாக்க கூடும். இதனால் ஓஆர்எஸ் என்று தவறாக கூறிய விற்கப்பட்ட பானங்களால் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் இருந்த நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Dr Sivaranjani Santosh பதிவைப் பகிர்ந்துள்ளார் (@drsivaranjanionline)