தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் அதிமுகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டே இந்த முறை பாஜக ஆட்சியை தமிழகத்தில் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளது.
அதற்காக பாஜக பலவித வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் போக்குவரத்து ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் என யார் கோரிக்கையையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சியின் முடிவு நாளை மக்கள் எண்ணிக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் 171 நாட்களுக்குப் பிறகு நம்ம NDA ஆட்சி மலரும் என்றும் இபிஎஸ் முதல்வர் ஆவார் என்றும் சூளுரைத்துள்ளார்.
