தென்மாவட்ட பயணிகளின் கவனத்திற்கு…! தீபாவளிக்கு ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கலையா….? வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

By Devi Ramu on ஐப்பசி 17, 2025

Spread the love

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். பயணிகளின் வசதிக்காக ஐந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தாம்பரம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கோட்டையை நோக்கி செல்லும்.

தீபாவளி அன்று செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு தாம்பரம் நோக்கி செல்லும். அடுத்ததாக சென்னையில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அடுத்ததாக மதுரையிலிருந்து திண்டுக்கல் திருச்சி, அரியலூர் வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நாளை சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மயிலாடுதுறை, திருவாரூர், நீடாமங்கலம் வழியாக மதுரையை சென்றடையும். கடைசியாக தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய் கிழமை அன்று இயக்கப்படும் சிறப்பு ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு வந்தடையும்.