தமிழக சட்டசபை கூட்டத்துடன் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்று இருக்கும் நயினார் நாகேந்திரனை முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். சட்டப்பேரவை இன்று காலை வழக்கம் போல தொடங்கி வினா விடை நேரம் நிறைவடைந்த போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்ற தொடங்கினார். அப்போது, பாஜக தலைவராக பொறுப்பேற்று இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் பொறுத்தவரை கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் அன்போடும் அமைதியோடும் பேசக்கூடியவர். கட்சி பாகுபாடு இல்லாமல் இருக்கக்கூடிய அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே கிடையாது.
எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் அவர் விமர்சனங்களை முன் வைக்கும் போது கூட கோபத்துடன் சொல்ல மாட்டார். அவ்வளவு ஏன், வெளிநடப்பு செய்யும்போது கூட சிரித்துக் கொண்டே வெளிநடப்பு செய்யக்கூடியவர். யாருக்கும் எந்த வகையிலும் கோபம் வராத வகையில் அணுகக் கூடியவர். ஒரு சிறந்த அரசியல்வாதியாக இருக்கக்கூடிய அவருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் இன்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். திடீரென்று சட்டப்பேரவையில் பாஜக மாநில தலைவரை ஸ்டாலின் புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் இருந்துள்ளது.
