சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி கிட்னி திருடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாரபட்சம் ஏதும் இன்றி கிட்னி திருட்டில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி வருகின்ற காலங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதை வீடியோ பதிவு செய்வதற்கு உத்தரவிடப்படும். கடந்த அதிமுக ஆட்சியிலும் ரூ.5 மற்றும் ரூ.10 லட்சத்திற்கு கிட்னி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
