தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தரப்பு அரசு ஊழியர்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2024-25 ஆம் ஆண்டுக்கான போனஸ், கருணைத்தொகை 175 கோடியே 51 லட்சம் ரூபாய் அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 1,05,955 பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். எனவே போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் தங்களது வங்கி கணக்கை உடனே செக் பண்ணுங்க.
