மொத்த கண்ட்ரோலும் அங்க தான்… விஜய்யை இயக்கும் பாஜக… பரபரப்பை கிளப்பிவிட்ட முக்கிய அரசியல் பிரபலம்…!

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு பல தரப்பினரும் விஜய்க்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் இந்த விவகாரத்தில் விஜய்க்கு சாதகமாக பாஜகவும் அதிமுகவும் செயல்பட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் இன்று பரபரப்பாக விவாதம் நடைபெற்றது.

   

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன், விஜய்யை பாஜக இயக்குகிறது, பாசிச பாஜக என்று பேசியவர் இன்று ஹேமா மாலினி கமிட்டியை வரவேற்கிறார். கரூர் சம்பவம் நடைபெற்ற உடனே விஜய் வீட்டுக்கு துணை ராணுவம் செல்கிறது. விமான நிலையம் உள்ளே அவர் கார் செல்கிறது, இதற்கு யார் அதிகாரம் கொடுத்தனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.