மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் ஒருவர் இரவில் ஆண் நண்பருடன் உணவருந்த வெளியே சென்ற போது வழிமறித்த கும்பல் மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் மாணவியை இழுத்துச்சென்று சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவத்தில் மாணவியின் புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நான்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவரை ஏற்கனவே கைது செய்திருந்தார்கள்.
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சபிக் என்பவரை தேடி வந்தனர்.இந்த நிலையில் தான் சபீக்கின் மூத்த சகோதரி ரோஸீனா தன்னுடைய சகோதரன் சபீக் அண்டால் வாண்டேன் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து காவல்துறையின் சபீக்கை கைது செய்தார்கள். மேலும் ஊடகங்களிடம் பேசிய ரோஸீனா. ” என்னுடைய சகோதரன் மிகப்பெரிய தவறு செய்தார். அதனால் அவனுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக போலீசுக்கு தகவல் கொடுத்தேன்” என்று கூறியுள்ளார்.
