இரவு நேர விருந்து, அரை நிர்வாணமாக ஆட்டம்… விடுதியில் மருத்துவர்கள் செய்த அட்டூழியம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

By Soundarya on ஐப்பசி 15, 2025

Spread the love

டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனைக்கு அருகிலுள்ள விடுதியில் முதுகலை மருத்துவ மாணவர்களின் இரவு நேர விருந்தின் போது சத்தமாக இசை எழுப்பியதாக  பக்கத்துக்கு வீட்டாரின் புகார்களைத் தொடர்ந்து போலீசார்  சென்றுள்ளார்கள்.  ஆனால் மாணவர்கள் விருந்தை நிறுத்த மறுத்ததாகவும், காவல்துறை அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்களை எதிர்கொண்டபோது அரை நிர்வாண நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வீடியோவில் பதிவான இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது . 

இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது. விருந்து நடந்த அறையில் இருந்த மருத்துவர் அப்போது பணியில் இல்லை என்பதை முதல்வர் கீதா ஜெயின் உறுதிப்படுத்தினார். இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், நிர்வாகம் இந்த சம்பவத்தை தீவிரமாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.