ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்…. ஆட்சியில் பங்கு… முடிவை அறிவித்த முக்கிய கூட்டணி கட்சி…!

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஆட்சியில் பங்கு கேட்டு கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இதனால் அறிவாலயத்தில் சலசலப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கேட்க மாட்டோம் என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் இன்னும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக தெரிகிறது. சமீபத்தில் கூட காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்க உள்ளதாக விஜய் வசந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.