விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 5-ஆம் தேதி பிக் பாஸ் 9- வது சீசன் தொடங்கியது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோசமான காட்சிகள் ஒளிபரப்படுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து இன்று சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்துள்ளார்.
அதில், “மாணவச்செல்வங்கள் மற்றும் இளைய தலைமுறையையும் தமிழரின் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்க நெறிகளையும் சீரழிக்கும் மோசமான காட்சிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி மூலம் தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
