தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய்க்கு எதிராக பலரும் விமர்சித்து வந்தனர். இதனிடையே கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணி தொடங்கியது…#tvk #tvkfortn #tvkväll #tvkvijay #tvkforever❤️💛❤ pic.twitter.com/CJvFDrHdjl
— Dr N. Marie Wilson (@MarieWilson_TVK) October 13, 2025
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பாகவும், விஜய் சார்பாகவும் நிவாரணம் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அக்கட்சியின் சார்பில் வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.5000 வழங்கப்படும் எனவும், அவர்களுக்கு ஆயுள் காப்பீடும் கல்வி தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு அளிக்கப்படும் – ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தலைவர் மரிய வில்சன்
