சட்டமன்ற வளாகத்தில் பாமக அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாமக, சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து GK மணியை அன்புமணி நீக்கிஅறிவித்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகரை சந்தித்து எம்எல்ஏக்கள் SP வெங்கடேஸ்வரன், சிவக்குமார், சதாசிவம் ஆகிய மூன்று பேரும் முறையிட்டனர். அதனை ஏற்க மறுத்த காரணத்தால் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
