பயங்கர அதிர்ச்சி… திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 14, 2025

Spread the love

சென்னை திருவான்மியூரை சேர்ந்த வழக்கறிஞர் கௌதம் கொலை வழக்கில் கைதான திமுக பிரமுகர் ரியல் எஸ்டேட் அதிபருமான குணசேகரன் சிறையிலிருந்து வெளிவந்த நிலையில் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டார். காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாறு அருகே பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்த நிலையில் குணசேகரன் உயிரிழந்தார்.

வழக்கறிஞர் கௌதம் கொலைக்கு பழிக்கு பலியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.