அதிரடி ஆஃபர்.. இலவசமாக ரூ.1,000 ரீசார்ஜ்… அக்டோபர் 31 வரை மட்டுமே….!

By Nanthini on ஐப்பசி 14, 2025

Spread the love

டோல்கேட்டில் பாத்ரூம் அசுத்தமாக இருந்தால் உடனே NHAI இடம் புகார் அளித்து Fastag-க்கு 1000 ரூபாய் டாப் அப் பெறலாம். இதற்கு “RajamargYatra” செயலியில் அழுக்கான பாத்ரூமின் போட்டோ உடன் நேரம் மற்றும் இடத்தை குறிப்பிட்டு அப்லோடு செய்ய வேண்டும். இத்துடன் வண்டி தகவல்கள் மற்றும் பெயர் ஆகியவற்றையும் அளிக்க வேண்டும். நீங்கள் அளித்த தகவல் உறுதி செய்யப்பட்டால் உங்கள் கணக்குக்கு பணம் கிரெடிட் ஆகிவிடும். இந்த புதிய நடைமுறை வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.