தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய்க்கு எதிராக பலரும் விமர்சித்து வந்தனர். இதனிடையே கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழுவை அமைத்த நீதிமன்ற முத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நீதி வெல்லும் என்ற குறிப்பிட்டுள்ளார். சிபிஐ விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு கண்காணிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ள நிலையில் விஜயின் இந்த பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.
