குடும்பத் தலைவிகளே ரெடியா இருங்க… ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை… அரசு முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 13, 2025

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு குடும்பத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தகுதி இருந்தும் சிலருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. வட்டாட்சியர்கள் தங்கள் பகுதியின் மனுக்களை பிரித்தளித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. நாள்தோறும் குறைந்தது 100 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து அதற்கான செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் எந்த நேரத்திலும் ஆய்வுக்காக வீட்டுக்கு வரலாம். எனவே குடும்ப தலைவிகள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.