ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புகழேந்தி, தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்ணா உருவம் பதித்த அதிமுக கொடி கொடியாக தெரியவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் கொடியை காட்டி அது பறக்கிறது என்று கூறும் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடி என்ன ஆயிற்று ? கூட்டணியில் பிஜேபி இதை ஒத்துக் கொள்கிறதா? பிஜேபியை தங்களுடைய எதிரி என்று விஜய் பிரச்சாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து பேசுவதோடு இல்லாமல் பிஜேபியுடன் தான் போட்டி என்று கூறி வருகிறார்.
இந்த சூழலில் தான் கரூர் சம்பவம் நடந்தது. தன்னுடைய கூட்டணியில் பிஜேபியை வைத்துக் கொண்டே விஜய் கட்சி கொடி என்று ஏபிஎஸ் கூறுகிறார். சொந்தக்கொடி போய்விட்டது என்பதை உணராமல் ஊரில் உள்ள கொடிகளை எல்லாம் சொந்த கட்சி காரனை விட்டு அதை பிடிக்க சொல்லும் அவமான நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை விஜய் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு அவர் முதலமைச்சர் ஆனால் பழனிச்சாமிக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். எனவே ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.
