கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தான் கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து Sc உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ஏன்? என்று விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில் அதை மீறுவதா? எனவும், எதையும் ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி, SIT விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இது TVK வுக்கு வெற்றியாகவும், ஆளும் திமுக அரசுக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
