கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ஐகோர்ட் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து Sc உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ஏன்? என்று விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில் அதை மீறுவதா? எனவும், எதையும் ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி, SIT விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தவெகவின் ஆதவ் அர்ஜுனா, “கரூரில் காவல் துறையினர் எங்களை வரவேற்றனர். வேறு எங்கும் எங்களை வரவேற்காத காவல்துறையினர் அங்கு மட்டும் ஏன் வரவேற்றனர்? எங்களின் கட்சியை ஒட்டுமொத்தமாக முடக்க திமுக அரசு முயற்சித்தது. கூட்ட நெரிசல் சம்பவம் நடந்ததும் கரூர் மாவட்ட எல்லையில் நாங்கள் காத்திருந்தோம். பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்பத்தினரை தத்தெடுப்பேன் என விஜய் கூறினார்” என்றார்.
