BREAKING: அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்…. சுரேஷ் கோபி பரபரப்பு அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 13, 2025

Spread the love

மத்திய பெட்ரோலியம், சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தனக்கு மாற்றாக ராஜ்யசபா எம்பி சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக வேண்டும் என்றும் இதன் மூலமாக கேரளா அரசியலில் திருப்புமுனை ஏற்படும் என்றும் பாஜக தலைமைக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே அவர் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்று தலைமையிடம் கூறி இருந்த நிலையில் டெல்லி மேலிடம் தற்போது ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து சினிமாவில் தான் நடிக்க உள்ளதாக அவர் வர் வெளிப்படையாகவே அறிவித்தார். இருப்பினும் கேரளாவின் ஒரேயொரு லோக்சபா எம்பி என்பதால் மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்படியான சூழலில் தான் சுரேஷ் கோபி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.