திருமாவளவன்… தமிழகத்திற்கே சாபக்கேடு… எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு… கொந்தளித்த அண்ணாமலை…!

By Nanthini on ஐப்பசி 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக மற்றும் அதிமுக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விஜய் பாஜக மற்றும் திமுகவை தங்கள் எதிரி என்று கூறிக் கொண்டிருக்க அது எப்படி சாத்தியமாகும் என்பதும் ஒரு பக்கம் கேள்விக்குறியாக தான் உள்ளது.

மறுபக்கம் மாற்று கட்சியினரை மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு திருமாவளவனின் எண்ண ஓட்டம் குழப்பத்தில் இருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். எல்லாவற்றுக்கும் RSS, BJP என்று கூறும் திருமாவின் அரசியல் தரம் தாழ்ந்து மாறி இருப்பதாகவும், தவறு செய்த பிறகு தப்பிக்க RSS, BJP, அண்ணாமலை என பழி போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற தலைவர்கள் இருப்பது தமிழகத்திற்கு சாபக்கேடு எனவும் அண்ணாமலை சாத்தியுள்ளார்.