என்னோட துணிச்சலும், தைரியமும் விஜய்கிட்ட 1% கூட இல்ல… விஜய்யை மீண்டும் சீண்டிய ஓவியா..!!

By Soundarya on ஐப்பசி 12, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் குறித்து விஜய்க்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருது தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் நடிகை ஓவியா, தவெக தலைவர் விஜய் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே மக்களை பயன்படுத்துகிறார் என்று விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “41 பேர் உயிரிழந்தவர்கள் குறித்து துணிச்சலாக பேசியதால், நீங்கள் தான் தமிழ் சினிமாவின் உண்மையான ஹீரோயின்” என்று மக்கள் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி உங்களின் தைரியமும், துணிச்சலும் விஜய்யிடம் ஒரு சதவிகிதம் கூட இல்லை” என்று மக்கள் கருத்து தெரிவித்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.