திடீர் ஷாக்..! திமுக கூட்டணியில் மாற்றம்….? புதிய குண்டை தூக்கிப்போட்ட எடப்பாடி பழனிச்சாமி…!!

By Soundarya on ஐப்பசி 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக , நாதக, தவெக என இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இதற்கிடையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் சேலத்தில் இன்று  செய்தியாளர்களிடம் பேசிய  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக கூட்டணியில் அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்வதில் உரசல் தொடங்கிவிட்டது.  ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் அதிக இடங்கள் வேண்டும் என திமுகவின் கூட்டணி கட்சிகள் கேட்க தொடங்கிவிட்து. இதனால், திமுக கூட்டணிக்குள் உரசல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகும் கூட இந்த கூட்டணியில் மாற்றங்கள் வெறும் என தெரிவித்துள்ளார்.