உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டம் ஜோசப் கிராமத்தை சேர்ந்த சூரஜ் (26) என்பவர் கடந்த ஆண்டு அர்ஷி என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்தார். சூரஜ் இந்து மதத்தை சேர்ந்தவர். ஆனால் அந்தப் பெண் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. இப்படியான நிலையில் வெளியூரில் தங்கி இருந்த சூரஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜசாய் கிராமத்திற்கு வந்துள்ளார். நேற்று அவர் கிராமத்தில் உள்ள தெருவில் தனது நண்பர்களுடன் இன்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சூரஜை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒரு நபரை தேடி வருகிறார்கள். கலப்பு திருமணம் செய்ததால் பெண் வீட்டார் இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
In #Muzaffarnagar, #UttarPradesh, Suraj and his brother, who had married a Muslim girl for love, were attacked. The injured have been admitted to the hospital. Suraj’s mother, Pinky, filed an FIR against Naseem Alvi, Waqar, Naeem, Qayyum and Kaifi under serious sections.
1/2 pic.twitter.com/tngOltcq8R— Siraj Noorani (@sirajnoorani) October 12, 2025
