செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் வசந்த் எம் பி, “வாக்குத்திருட்டு செய்துதான் பாஜக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார், அதை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது, ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக நிரூபித்த பிறகு தேர்தல் ஆணையம் எதுவுமே செய்ய முடியாத நிலையில் உள்ளது, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் கூறியதாக நீங்கள் கேட்கிறீர்கள்.
அது அனைத்து காங்கிரஸ்காரர்களின் ஆசையும் கூட. தொடர்ந்து வெற்றி கூட்டணியில் இருந்து கொண்டிருக்கிறோம். அதனால் ஆட்சியில் பங்கு வேண்டும், கூடுதல் சீட்டு வேண்டும் என்ற எண்ணம் எல்லா காங்கிரஸ்காரர்களுக்கும் இருக்கிறது. ஆனால் அனைத்து முடிவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுக்கும் என்று கூறியுள்ளார் .
