இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் பண்டிகை காலங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு ஆபர்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தீபாவளி பரிசாக மூன்று மாதம் ஹாட்ஸ்டார் சேவையை இலவசமாக வழங்கும் ரீசார்ஜ் ஆஃபரை ஜியோ வழங்கியுள்ளது.
வெறும் 445 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு தினமும் இரண்டு ஜிபி டேட்டா , அன்லிமிடெட் கால், தினமும் 100 SMS, SONYLIVE உள்ளிட்ட சுமார் 10 OTT சப்ஸ்கிரைப்ஷன், ஹாட் ஸ்டார் மொபைல்/டிவி 3 மாத சந்தா, அன்லிமிடெட் 5g சேவை கிடைக்கும். இதேபோல 449 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டத்திற்கு மூன்று மாத ஹாட்ஸ்டார் சேவை இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
