தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி மற்றும் கமல் உள்ளிட்டோரின் முக்கிய படங்களில் கேமராமேனாக பணியாற்றிய பாபு (88) மாரடைப்பால் இன்று காலமானார். இவருடைய உடல் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் முரட்டுக்காளை, கழுகு, பாயும் புலி மற்றும் கமல்ஹாசனின் தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். அதுமட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் இவர் நடிகராக நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருவதோடு பலரும் நேரில் சென்று அஞ்சலை செலுத்தி வருகிறார்கள்.
