“இப்போவே தனி வழக்கு போடணும்…” போலீஸ் ஸ்டேஷன் முன்பே தீக்குளித்த நபர்…. இரவில் நடந்த பயங்கர சம்பவம்….!!

By Devi Ramu on ஐப்பசி 11, 2025

Spread the love

தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகரை சேர்ந்தவர் சுவிசேஷ ராஜ்(42). இவரது மனைவி முத்துக்கனி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜ் தூத்துக்குடியில் பிரியாணி கடை நடத்தி வந்த நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 1-ஆம் தேதி ராஜுக்கும் அவரது உறவினர்களான தீபக்ராஜ், மாசன முத்து, கனி, பாண்டி ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் உறவினர்கள் இரும்பு கம்பியால் ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மாசாணி முத்து தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்தனர். தனது செல்போன் பைக் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதால் அதற்கு தனி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ராஜ் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

   

அதற்கு போலீசார் FIR-ல் இருப்பதாக கூறியும் தனி வழக்கு பதிய வேண்டும் என ராஜ் வற்புறுத்தியுள்ளார். இதனால் நாளை வாருங்கள் என போலீசார் கூறியுள்ளனர். அதனை ஏற்காமல் மன உளைச்சலில் இருந்த ராஜ் காவல் நிலைய வாசலிலேயே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் ராஜை வீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.