இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு செயலிகளில் முக்கிய பங்கு வகிப்பது whatsapp. தினம்தோறும் ஏராளமான பயனாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது whatsappபில் சில சுவாரஸ்யமான அம்சங்களை களமிறக்க உள்ளனர்.
அதன்படி ஐஓஎஸ் பயனர்கள் லைவ் போட்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் மோஷன் போட்டோஸ் ஸ்டேட்டஸ் மற்றும் சாட்களில் பகிரும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. அதுமட்டுமல்லாமல் மெசேஜ்களை மொழிபெயர்க்கும் வசதியும், குரூப் சாட்களில் மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் Threade replies மற்றும் வீடியோ நோட்ஸ் அனுப்பும் வசதியையும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சங்களை பெற பயனர்கள் whatsapp-பை அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
