சீமான் பெண்ணாக பிறந்திருந்தாலும் அழகாகத் தான் இருந்திருப்பார் என இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். அஜயன் பாலா இயக்கத்தில் அஜய் அர்ஜுன் தயாரித்துள்ள படம் ‘மைலாஞ்சி’. ஸ்ரீராம் கார்த்திக் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் விழாவில் பேசிய மிஷ்கின், சீமான் பெண்ணாக பிறந்திருந்தால் அழகாக இருந்திருப்பர். அவர் அழகில் யாரும் மயங்கவில்லை என்றாலும், அவரது பேச்சில் மயங்கி 20 பேர் பின்னாலேயே வந்திருப்பார்கள். . சினிமாவில் வாய்ப்பு தேடிய காலங்களில் நள்ளிரவானாலும் உணவு சமைத்து கொடுத்தவர் சீமான் என்றும் புகழ்ந்துள்ளார்.
